Tower wall of the collapsed Srirangam temple

Advertisment

ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்ததுபக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. கடந்த சில மாதங்களாகக் கோவில் கிழக்கு வாசலில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகப் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு வாயிலின் கோபுரத்தின் முதல்நிலை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிர்ப் பலிகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.