Tourists shocked by non-vegetarian food, alcohol in temple

தென்காசி மாவட்டம் குற்றாலநாதர் கோவிலில் சில நபர்கள் அசைவ உணவு சாப்பிட்டதோடு மது அருந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மிகவும் பிரசித்தமானது குற்றாலநாதர் கோவில். சித்திரச்சப்பை தேரடி வீதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் கோயில் வளாகத்தில் மது அருந்தியதோடு, அங்கேயே அசைவ உணவு சமைத்து சாப்பிடும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அவர்களிடம் அங்கு இருந்தவர்கள் கேள்வி எழுப்பிய பொழுது தெரியாமல் செய்து விட்டோம் என்று பதில் அளித்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அங்கு வந்த கோவில் நிர்வாக அலுவலர் ஆறுமுகம் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.