podi

Advertisment

கோவை, ஈரோடு பகுதிகளைச்சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 40 பேர் நேற்று தேனி மாவட்டம் போடியில் குரங்கணி மலைப்பகுதி அருகே உள்ள கொழுக்கு மலைக்கு சென்றனர். ஒருவருக்கு 200 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி, வனத்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதலின் படியே சென்றனர்.

கடந்த 4 நாட்களாக மூணாறு செல்லும் வழியான போடி மெட்டு பகுதியில் காட்டு தீ பரவி வனத்தையே அழித்து வருகிறது. இத்தீயானது கொழுக்கு மலைக்கும் பரவியதால் சுற்றுலாப்பயணிகள் 40 பேரும் தீயில் சிக்கி தவித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்பு படையினரின் முயற்சியில் இவர்களில் 7 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

.