இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஊர்க்காவல்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல்ப்படை வீரரான தீர்த்தகிரி என்பவர், திருவிழா முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதியது. இதில் தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, உயிரிழந்த தீர்த்தகிரியின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுற்றுலா வாகனத்தின் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.