Advertisment

சுற்றுலா சென்ற வேன் நள்ளிரவில் விபத்து; 10 பேருக்கு காயம்

Tourist van crashes in the middle of the night

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து ஒகேனக்கலுக்கு சுற்றுலா செல்வதற்கு சிலர் குடும்பத்துடன் புறப்பட்டனர். சுமார் 20 நபர்களுடன் டெம்போ வேன் மே 27 ஆம் தேதி நள்ளிரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அப்துல்லாபுரம் ஏரோட்ரம் மேம்பாலத்தின் மீது செல்லும்போது முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

hospital police ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe