ADVERTISEMENT

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தப்லீக் மதப்பிரச்சாரம் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

01:17 PM Jun 18, 2020 | santhoshb@nakk…



ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கதேசம், இந்தோனேஷியா நாடுகளில் இருந்து வந்த தப்லீக் ஜமாத்தினர் மீது, கரோனா பரப்பியதாகவும், விசாவை தவறாகப் பயன்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வைத்தார்கள். அதில் பெண்களும் அடங்குவர்.

பின்னர் அதில் சிலருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீன் கிடைத்த பின்னரும் அவர்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்து வந்தனர். சொந்த நாடு திரும்ப விடாமலும் தனது நாட்டின் தூதரக அதிகாரிகளிடனும், தம் குடும்பத்தினருடனும் தொடர்பு கொள்ள இயலாமலும் தவித்து வந்தனர். இவர்களை மீட்க வேண்டும் என்று வங்கதேசத்தை சேர்ந்த கமாலுதீன் மற்றும் தஞ்சை, இராமநாதபுரம், ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் வழங்கியுள்ள தீர்ப்பின் விவரங்கள் வருமாறு...

1. அவர்கள் எதையோ எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் அதற்கு மாற்றமாக பல விஷயங்கள் நடந்து விட்டன. அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியே சிறு தவறு செய்திருந்ததாக வைத்துக் கொண்டாலும் 70 நாட்கள் அவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். அந்தத் தண்டனையே அவர்களுக்கு அதிகம். அதனால் கோர்ட் அவர்களுக்குச் சொந்த ஜாமீன் வழங்குகிறது.

2. ஜாமீன் பெற்ற பின்னர் அவர்களை அகதிகள் முகாமில் வைப்பது தவறானது. கரோனா காலத்தில் இவ்வாறு வைத்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டால் Article 21 படி அவர்கள் உயிர் வாழும் அடிப்படை உரிமையை அரசாங்கம் பறித்தது போல ஆகி விடும். அதனால் அவர்கள் தம் சொந்த நாடு திரும்பும் வரை வண்ணாரப்பேட்டை காஷிமி அரபிக் கல்லூரியில் தங்கி இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

3. தாம் விசா நிபந்தனைகள் மீறி விட்டோமென்று வருத்தம் தெரிவித்து அவர்கள் எழுதித் தந்தபின் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவுக்குள் வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

4. ICCPR Article 12(4) என்ற சர்வதேச சட்டத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்களை நாடு திரும்ப விடாமல் இந்தியாவிலேயே தடுத்து வைத்திருப்பது பெருங்குற்றமாகும். அனைவரும் சொந்தச் செலவில் தமது நாட்டுக்குத் திரும்ப தயாராக உள்ளதால் உடனடியாக அவர்களின் எம்பசியுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தம் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT