Skip to main content

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தப்லீக் மதப்பிரச்சாரம் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020



 

tourist peoples highcourt madurai branch judgement

 

வங்கதேசம், இந்தோனேஷியா நாடுகளில் இருந்து வந்த தப்லீக் ஜமாத்தினர் மீது, கரோனா பரப்பியதாகவும், விசாவை தவறாகப் பயன்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வைத்தார்கள். அதில் பெண்களும் அடங்குவர். 

 

பின்னர் அதில் சிலருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீன் கிடைத்த பின்னரும் அவர்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்து வந்தனர். சொந்த நாடு திரும்ப விடாமலும் தனது நாட்டின் தூதரக அதிகாரிகளிடனும், தம் குடும்பத்தினருடனும் தொடர்பு கொள்ள இயலாமலும் தவித்து வந்தனர். இவர்களை மீட்க வேண்டும் என்று வங்கதேசத்தை சேர்ந்த கமாலுதீன் மற்றும் தஞ்சை, இராமநாதபுரம், ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் வழங்கியுள்ள தீர்ப்பின் விவரங்கள் வருமாறு...

 

1. அவர்கள் எதையோ எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் அதற்கு மாற்றமாக பல விஷயங்கள் நடந்து விட்டன. அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியே சிறு தவறு செய்திருந்ததாக வைத்துக் கொண்டாலும் 70 நாட்கள் அவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். அந்தத் தண்டனையே அவர்களுக்கு அதிகம். அதனால் கோர்ட் அவர்களுக்குச் சொந்த ஜாமீன் வழங்குகிறது.

 

2. ஜாமீன் பெற்ற பின்னர் அவர்களை அகதிகள் முகாமில் வைப்பது தவறானது. கரோனா காலத்தில் இவ்வாறு வைத்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டால் Article 21 படி அவர்கள் உயிர் வாழும் அடிப்படை உரிமையை அரசாங்கம் பறித்தது போல ஆகி விடும். அதனால் அவர்கள் தம் சொந்த நாடு திரும்பும் வரை வண்ணாரப்பேட்டை காஷிமி அரபிக் கல்லூரியில் தங்கி இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

3. தாம் விசா நிபந்தனைகள் மீறி விட்டோமென்று வருத்தம் தெரிவித்து அவர்கள் எழுதித் தந்தபின் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவுக்குள் வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

 

4. ICCPR Article 12(4) என்ற சர்வதேச சட்டத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்களை நாடு திரும்ப விடாமல் இந்தியாவிலேயே தடுத்து வைத்திருப்பது பெருங்குற்றமாகும். அனைவரும் சொந்தச் செலவில் தமது நாட்டுக்குத் திரும்ப தயாராக உள்ளதால் உடனடியாக அவர்களின் எம்பசியுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தம் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Next Story

பிரதமர் மோடியின் பேரணி விவகாரம்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Justice Anand Venkatesh order by PM Modi rally issue

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி (18.03.2024) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (15.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

Justice Anand Venkatesh order by PM Modi rally issue

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ரோடு ஷோவுக்கு அனுமதி அளிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு பிரதமரின் பாதுகாப்பை கவனித்துக்கொள்ளும் நிலையில், பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தால் ரோடு ஷோவுக்கு எப்படி அனுமதி வழங்கியிருப்பார்கள். ஒரு வேளை பாதுகாப்பு குறைபாடு இருக்குமானால் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவின் மூலமே ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார். அதற்கு போலீஸ் தரப்பில், “தமிழக போலீஸ் தரப்பில் பேரணிக்கு தங்களிடம் தடையில்லா சான்று கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தில் மாநில காவல்துறைக்கு சமமான பொறுப்பு உள்ளதால் அவற்றை கருத்தில் கொண்டுதான் தற்போது ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

Justice Anand Venkatesh order by PM Modi rally issue

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன்  4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.