Advertisment

உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

Tourist attractions closed in Ooty 

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் (25.05.2025), நாளையும் (26.05.2025) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டடிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், படகு இல்லம் உள்ளிட்ட 7 சுற்றலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.

Advertisment

அதே சமயம் மற்ற சுற்றலா தளங்களுக்கு செல்பவர்கள் மாலை 4 மணிக்குள் விடுதிக்கு திரும்பி விட மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலைகளில், பொதுமக்கள் அவசர உதவிக்காக மாவட்ட அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1077 மற்றும் 0423-2450034, 0423-2450035 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மூலம் அவசரக் கால உதவிக்கு 9488700588 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் உதகை, குந்தா, பந்தலூர் போன்ற பகுதிகளில் மண் சரிவு, மரங்கள் விழுதல் போன்று சற்று பாதிப்புகள் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதே சமயம் அதிகாலை 2 மணி முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவலாஞ்சி போன்ற பகுதியில் நேற்று இரவு முதல் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 6 இடங்களில் மரங்கள் விழுந்துள்ள காரணத்தால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கமாண்ட் பிரதீஷ் தலைமையில் 30 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

help line number red alert rain nilgiris ooty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe