தேனி மாவட்டம் குரங்கணியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான 9 பேரின் சடலங்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மலையேற்ற பயிற்சி நிறுவனம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமல் காட்டுக்குள் அவர்கள் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில், மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us