Advertisment

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த தேர்தல் முறையாகத்தான் நடந்ததா? - சீமான் கேள்வி

இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

Advertisment

தமிழகத்தில் திரை கவர்ச்சி அதிகம்.ஆந்திராவை எடுத்துக்கொண்டதால் என்டி.ராமராவ் வந்தது ஒரு விபத்து. அதற்குப்பிறகு வந்த சிரஞ்சீவியோ அல்லது பவன் கல்யானோநினைத்த இடத்தை தொட முடியவில்லை போராடி போராடித்தான் வந்தனர்.

Advertisment

seeman

திரைப்படத்துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. திரை கவர்ச்சி ஒன்று மட்டுமே அரசியல் செய்ய தகுதியாக எப்படிஎடுத்துக்கொள்வது. நானேபட்டேக்கரை எடுத்துக்கொண்டால் அவர் சம்பாரிப்பதில் பாதிக்கும்மேலான தொகையை மக்களுக்கு செலவளிக்கிறார். நீண்ட காலமாக செய்து வருகிறார் ஆனால் அவரே அரசியலுக்கு வரவில்லையே. நீங்கள் எந்த போராட்டத்திலும் பங்கேற்பதில்லை மக்கள் பிரச்சனைக்கும் குரல் கொடுப்பதில்லை, எதுக்கும் பேசுவதில்லை.

அரசியலுக்கு வரும்போதுதான் கருத்து சொல்வேன் என்றார்இப்பொழுது தமிழகத்தில் பாஜக தோற்றதற்கு நீட்டும், ஸ்டெர்லைட்டும்தான் காரணம் என கருத்து சொல்கிறார் ரஜினிகாந்த். யாரு கேட்டது. கஜா புயலின் போது ஏன் மக்களை சென்று பார்க்கவில்லை என்று கேட்டதற்கு இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்கிறார். கட்சி ஆரம்பித்தால்தான் மக்கள் பிரச்சனையை பேசுவேன் என்றால் அதுஎப்படி.

நேரு, இந்திரா காந்தியோடு ஒப்பிட்டு மோடிதனித்துவமான நபர் என்று ரஜினி சொல்கிறாரே..?

அவர்மீது உள்ள தனிப்பட்ட அபிமானத்தின் அடிப்படையில் அவர் அப்படி கூறியிருக்கலாம். மோடி எதில் தனித்துவம் பெற்றுள்ளார். காந்தியாருக்கு இருக்கின்ற தனித்துவம் உலக நாடுகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தி கூட்டு சேரா நாடுகளை ஒன்றிணைத்த இந்திரா காந்தியின் தனித்துவம், நேருவின் தனித்துவம் இப்படி எந்த தனித்துவத்துடன் மோடி இருக்கிறார்.

உண்மையிலேயே ஊடகவியலாளர்களிடம் கேட்கிறேன் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த தேர்தல் முறையாக நடந்தது என ஒத்துக்கொள்கிறீர்களா? சத்தியம் பேசுங்கள். மனச்சான்றுக்கு நேர்நின்று பதில் சொல்லுங்கள்.தேர்தல் முறைப்படி நடந்ததா? தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருந்ததா? வலையொளியில் பார்க்கிறோம் ஒரு பெட்டி கடை ஷட்டரை திறக்கும் போது 300 வாக்கு இயந்திரங்கள் உள்ளது. உலகம் முழுமைக்கும் காறித்துப்புகிறது. வாக்கு இயந்திரத்தை தயாரித்து கொடுக்கிற ஜப்பானே வாக்கு இயந்திர முறையை பின்பற்றவில்லை வாக்கு சீட்டு முறையை பின்பற்றுகிறது. பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிய சாமியே இதை வேண்டாம் என்று சொல்கிறார்.

இங்கு ஒரே ஒரு கேள்விதான் நீட் தேர்வில் நமது தங்கச்சியின் மூக்குத்தியை தோடை கழட்டினார்களாஇல்லையா? சிறிய மூக்குத்தியில் பிட்டை கொண்டு செல்லமுடியும் தோட்டில் பிட்டை கொண்டுசெல்ல முடியும் என சொல்கிறது என் நாடு அதை நம்பவும் சொல்கிறது. அதையும் நாம் நம்பினோம். தலைமுடியில் கொண்டுபோயிடுவோம் என தலையை கலைத்தது, துப்பட்டாவை வெட்டியதுஆனால் அவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் ஒரு தப்பும் நடக்காது நம்புங்க என்று சொல்கிறது இந்த நாடு இது எந்தமாதிரியான கட்டமைப்பு என கூறினார்.

nam tamilar Seeman talk seeman SEEMANISAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe