Advertisment

ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை; சிறைத்துறை டிஐஜி சஸ்பெண்ட்

Torture of a lifer; Prisons DIG suspended

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியைசித்திரவதை செய்தது தொடர்பாக டிஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

வேலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.சிறையில் கைதியாக இருக்கும் தன்னுடைய மகனை போலீசார் கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டு வேலைக்கு பயன்படுத்தியபோது பணம், பொருட்களைத் திருடியதாகதாக்குதல் நடத்தியதாகவும் சம்பந்தப்பட்ட கைதியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்கைதிசித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மத்திய சிறை ஜெயிலர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்றுவரைகாத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ராஜலட்சுமி தற்பொழுதுபணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் என மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

jail Prison
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe