Skip to main content

கோலாலம்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆமைகள்; சுற்றி வளைத்து பறிமுதல் செய்த அதிகாரிகள்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

 

Tortoises brought from Kuala Lumpur were confiscated by authorities Trichy airport

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை கோலாலம்பூரில்  இருந்து ஏர் ஏசியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், பயணிகளின் உடைமைகளை  சோதனை செய்தபோது, அதில் ஆமைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இதையடுத்து உடைமையின் உரிமையாளர்கள் யார் என்பதை கண்டறிந்த  அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் தடுத்து நிறுத்தினார்கள்.  அதனைத் தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த ரூட்கேசுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான அட்டைப் பெட்டிகளை சோதனை செய்த போது, அதில் அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களின் கடல் பகுதியில் அதிகம் வாழும் ரெட் இயாடு ஸ்லைடர் இனத்தைச் சேர்ந்த  ஆமைகள் என்பது கண்டறியப்பட்டது.   

 

இந்த ஆமைகள் கொண்டுவருவதற்கு,  அனுமதிக்கப்பட்டாலும், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் சரியாக  இல்லாததால், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். நேற்று காலை அவற்றை அதிகாரிகள் குழு கணக்கிட்ட நிலையில்,  மொத்தம் 6850 ஆமை குஞ்சுகள் இருந்துள்ளது; அதை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்