
சென்னையில் வடபழனியில் இருந்து பாரிமுனை செல்லும் பேருந்தில் பயணத்தின் பொழுது மழைநீர் உள்ளே கொட்டியதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
அண்மையாகவேசில இடங்களில் மழை நேரங்களில் அரசு பேருந்துகளில் மழை நீர் கசிவால் பேருந்துக்குள்ளேயே பயணிகள் குடை பிடித்தபடிபயணிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகும். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திக்கும் நிலையில் சென்னையின் முக்கிய வழித்தடத்தில் செல்லும் பேருந்திற்குள் மழைநீர் சாரைசாரையாக கொட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் வடபழனியில் இருந்து பாரிமுனை செல்லும் 17E என்ற பேருந்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்தின் உள்ளே அனைத்து பகுதியிலும் மழைநீர் கொட்டியதால்ஒருவர் கூட அமர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும்இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)