Advertisment

தொடர் மழை; அதிகரிக்கும் திருட்டுகள்; இருமடங்கு கண்காணிப்பில் காவல்துறை

torrential rain; Increasing thefts; Police on double watch

Advertisment

திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார். நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் திருட முயன்றுள்ளனர். திருடர்களின் சத்தம் கேட்டு ராம்குமார் வெளியில் வர திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ராம்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு இளைஞர்கள் அப்பகுதியில் தொடர்ச்சியாகக் கோவில் மற்றும்வீடுகளில் திருடியதுதெரிய வந்தது. மேலும் தொடர்மழையால் இளைஞர்கள் கையில் குடையுடன் இருந்ததும் பதிவாகி இருந்தது.சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதேபோல் ஈரோடு மோசி கீரனார் வீதியில் உள்ள ஜெயின் கோவிலில்மஹாவீர் சிலையிலிருந்த 8 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலையின் மேல் இருந்த தங்க நகைகள் மற்றும் கோவில் உண்டியலையும் திருடிச் சென்றுள்ளனர்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு நகரக் காவல்துறையினர் விசாரணை செய்தனர். சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதன் அடிப்படையில் விசாரணைசெய்து வருகின்றனர்.

Theft
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe