செந்துறையில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது பாளையத்தார் ஏரி.

Advertisment

இந்த ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சரவணவேல்ராஜ் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கு வந்த உதயசூரியன், செல்வகுமார், சாந்தி உள்ளிட்ட விவசாயிகள் இந்த பகுதியில் சிமெண்ட் ஆலை நிர்வாகம் எங்களை விவசாயம் செய்ய விடாமல் எங்களது பாதையை ஆக்கிரமிப்பு செய்து லாரிகளை இயங்குகிறார்கள்.

Advertisment

 torment to Farmers livelihoods

நீர்வரத்துவழியில் மண்ணை கொட்டி பாதை அமைத்து லாரிகளை இயக்கி எங்களை மிரட்டுகிறார்கள். மழைகாலத்தில் பெய்யும் தண்ணீர் தற்போது எங்களது விவசாய நிலங்கள் வழியாக செல்கிறது. அதனால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை காக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன் பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணவேல்ராஜ் அரியலூர் கலக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அரியலூர் கலக்டர் வினய் தங்களது பிரச்சினை குறித்து திங்கள் கிழமை மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்

Advertisment