Advertisment

7.5% அரசுப் பள்ளி மாணவர்களில் சிலட்டூர் பள்ளி மாணவன் மாநில அளவில் முதலிடம்!

kl;'

Advertisment

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர் படிப்பிற்கான விண்ணப்பம் பெறப்பட்டுள்ள நிலையில் 27ந் தேதி முதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. 28, 29 தேதிகளில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5% உள் இட ஒதுக்கீட்டில் செல்லும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று 7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவா 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவன் சிவாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

l;'

சிவா நம்மிடம் பேசும் போது.. " அரசுப் பள்ளியில் படித்து இன்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேரும் போது ஆங்கிலம் தடையாக இருக்க கூடாது என்பதற்காக என்னுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 பேர் அலஞ்சிரங்காடு குருகுலம் சிவநேசன் சாரிடம் ஆங்கிலப் பயிற்சி பெற்று வருகிறோம். கடந்த ஆண்டு மாணவர்கள் பயிற்சி பெற்றது பயன்உள்ளதாக சொன்னார்கள், எங்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது" என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe