/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/m,.jpg)
மருது பாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் சில பகுதிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வருடந்தோறும் சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவு தினம் சிறப்பாக அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு நாளை நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்சிவகங்கை, தேவக்கோட்டை, காளையார் கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட ஆறு தாலுக்காவிற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)