Tomorrow is a holiday for schools in Sirkhazi

Advertisment

வடகிழக்குp பருவமழை காரணமாகத்தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்த நிலையில் சென்னையிலும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழியில் ஆறு மணி நேரத்தில் பதிவான 44 சென்டிமீட்டர் மழை அந்தப் பகுதியையே வெள்ளக்காடாகக் காட்சியளிக்க வைத்தது. வரும் 20 ஆம் தேதி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீர்காழி வட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்த நிலையில் பள்ளிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.