Published on 25/11/2018 | Edited on 25/11/2018

நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
கஜா புயல் தாக்கத்தினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு நிவாரணப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல் மத்திய ஆய்வுக்குழுவும் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் கஜா புயல் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகையில் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகநாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.