நீலகிரியில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 Tomorrow is a holiday for schools and colleges in the Nilgiris!

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். அருகில் இருக்கும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆரஞ்சு போன்றவற்றை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரவை மீறிச் செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். கனமழை காரணமாக நேற்று நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

nilgiris rain weather
இதையும் படியுங்கள்
Subscribe