Skip to main content

தமிழகத்தில் நாளை கனமழை!!!

Published on 05/11/2018 | Edited on 05/11/2018

 

தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை இருப்பதாகவும், இது இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் 8ம் தேதி வாக்கில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்று வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களை நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்றவர்கள் உடனே கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்