நாளை தமிழகத்தில் முழுமுடக்கம்!!

 tomorrow Full lockdown in Tamil Nadu

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம்அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுமைக்கும் முழுமுடக்கம்கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி சென்ற ஞாயிற்று கிழமை பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில்நாளையும் தமிழகத்தில் முழு முடக்கம் அமலில் இருக்கும். இதனால் நாளை பாலகங்கள் மற்றும் மருந்து கடைகள்மட்டும் திறந்திருக்கும். வேறு எந்த கடைகளும் திறந்து இருக்காது. விதிகளை மீறி வெளியே செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

corona virus lockdown Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe