கர

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவுஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையபோலீசார் அழைத்து சென்று அடித்ததில் அவர்கள் இருவரும் ஒருவர்பின், ஒருவராக உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். சிலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு செய்யப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment