Advertisment

நாளை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது!

tomorrow all india polio vaccine drive

நாடு முழுவதும் நாளை (31/01/2021) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

Advertisment

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும், குழந்தைகளின் பெற்றோர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் அல்லதுஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் செவிலியர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்.மாணவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், "தமிழகத்தில் நாளை (31/01/2021) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால், கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது. கரோனாவிலிருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகொடுக்கலாம். 43,051 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும்" என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

DRIVE polio vaccine India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe