Advertisment

நிற்காமல் சென்ற கார் மீது சுங்கச்சாவடி ஊழியர் கல்வீச்சு;போலீசார் விசாரணை

கரூர் அருகே சுங்கச்சாவடியில் நிற்காமல் சென்ற கார் மீது சுங்கச்சாவடி ஊழியர் கல் வீசி தாக்கி காரின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த குழந்தை காயமடைந்த சம்பவத்தால் பரபரப்பு.

Advertisment

attack

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

attack

கேரள மாநிலத்தை சேர்ந்த விவின் வார்னேஷ் என்பவர் குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை கடக்கும்போது சுங்க கட்டணம் செலுத்தாமல் முன்னே சென்ற லாரியை பின் தொடர்ந்து செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போதுசுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கல்லால் காரின் பின் பக்க கண்ணடியை தாக்கியுள்ளார். இதனால் பின்பக்க கண்ணாடி உடைந்து காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண் குழந்தைக்கு அடிபட்டது. இதனால் அங்கு பரபரப்பு கிளம்ப அங்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

police break TOLLGATE
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe