அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி புதிதாக அமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
கடந்த மாதம் 26ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறு ஆனது. இதையடுத்து கலவம் ஏற்பட்டது. இதில் ஆத்திரபட்ட பயணிகளும் பொதுமக்களும் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.
அன்று முதல் இன்று வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில், சுங்கச்சாவடியில் புதுப்பிக்கும் பணிகள் முடிந்துவிட்டதால், வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படும் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.