Advertisment

ஒலிம்பிக் தடகளத்தில் தமிழகத்தில் இருந்து ஐந்து வீரர்கள்!

tokyo olympic games participate tamilnadu sports player

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள பிரிவில் தமிழகத்தில் இருந்து 2 விளையாட்டு வீரர்கள், 3 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

Advertisment

அதில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜிவ் ஆகிய வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

Advertisment

கலப்பு தொடர் ஓட்டம்- மூன்று வீராங்கனைகளும் தமிழர்களே!

ஒலிம்பிக்கில் 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் மூன்று வீராங்கனைகளும்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கலப்பு தொடரோட்டத்தில் மதுரையைச் சேர்ந்த ரேவதி வீரமணி, திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி, சுதா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி டோக்கியோ ஒலிம்பிக்கில் 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார். இந்த வீராங்கனைக்கு வயது 22. தகுதிச் சுற்றில் 400 மீட்டர் தூரத்தை 53.55 விநாடிகளில் கடந்து இலக்கை அடைந்தார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து இதுவரை 11 வீரர், வீராங்கனைகள் தகுதிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Athlete olympics sports players Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe