பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுபொதுமக்களுக்கு ரூ. 1000 ரொக்கபணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கவுள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. இதற்கு கரும்பு விவசாயிகள், எதிர்க்கட்சிகள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பொங்கல் தொகுப்புடன் கரும்புவழங்க வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகஅரசு பொங்கல் பரிசு தொகுப்பில்ஒரு முழு கரும்பும் தருவதாக அறிவித்தது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார்.