style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விராலிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ரூ1லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 2 யூனிட் அளவு கெண்ட கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நடைபெறுவதை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா எவ்வித முன்அறிவிப்பும் இன்றி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது கழிப்பறை தரமாக கட்டப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்து குறித்த காலத்திற்குள் கழிப்பறையினை கட்டி முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆய்வின்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, பள்ளியின் தலைமையாசிரியர் ரெ.சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.