Published on 27/08/2021 | Edited on 27/08/2021

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டுவந்தன. குறிப்பாக இந்த வருட ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மிக வேகமாக உயர்ந்த வண்ணம் இருந்தது. ஒருகட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 103ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, கடந்த 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை ரூ. 3 குறைத்தது. இதனால் தற்போது பெட்ரோல் விலை இரண்டு இலக்கத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று (27.08.2021) சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 99.20 என விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 93.52 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. பெட்ரோல் விலை நேற்றை விட 8 காசுகள் உயர்ந்தும், டீசல் விலைதொடர்ந்து அதே விலையிலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.