Today's Flight Adventure at the Marina!

Advertisment

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் பகல் ஒரு மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

சென்னை மெரினாவையொட்டிய காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் இந்த சாகச நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை காண, வருவோருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் வருவோர் காலை 9.30 மணிக்குள் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களுக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக, காமராஜர் சாலையொட்டி 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விமான சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் இலவசமாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன.