76 சிறார்களுக்கு பாதிப்பு-தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

 Today's corona situation in Tamil Nadu!

தமிழகத்தில் இன்று ஒருநாள்கரோனாபாதிப்பு என்பது 1,075ஆகபதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கை1,090ஆகபதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,21,553 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்குகரோனாஉறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில்கரோனாஒருநாள் பாதிப்பு என்பது 141 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில்ஒரேநாளில்12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,060 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்கரோனாசிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,288 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,315 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,50,145 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். 12 வயதிற்குட்பட்ட 76 சிறார்களுக்குகரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கோவையில்-125, ஈரோடு-71, செங்கல்பட்டு-90, தஞ்சை-95, திருவள்ளூர்-37, சேலம்-57, திருப்பூர்-70, திருச்சி-44, நாமக்கல்-43, நீலகிரி-47 பேருக்குகரோனாஇன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe