
தமிழ்நாட்டில் இன்று (01.12.2021) ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 720லிருந்து குறைந்து 718 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையைவிடச் சற்று குறைவு. இதில் 9 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்தவர்கள். இன்று ஒரேநாளில் தமிழ்நாட்டில் 1,00,562 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 117 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 115 என்றிருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,492 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,200 ஆக உள்ளது. இன்று ஒரேநாளில் 751 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,82,943 பேர் குணமடைந்துள்ளனர். கோவை - 118, ஈரோடு - 64, செங்கல்பட்டு - 64, காஞ்சிபுரம் - 17, திருவள்ளூர் - 26, தஞ்சை - 115, நாமக்கல் - 40, சேலம் - 45, திருச்சி - 46 , திருப்பூர் - 57 பேர் என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வகை கரோனாவைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு, வரும் டிசம்பர் 15ஆம் தேதிவரை கரோனா ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 23 மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு - கேரளா இடையே பொது பேருந்து போக்குவரத்து தொங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.