Advertisment

பிக் பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறுகிறார்...அதிர்ச்சி தகவல்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisment
Advertisment

kavin

தற்போது பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் மிக கடுமையானதாக மாறியுள்ளது. இதனால் போட்டியாளர்கள் உடல் நிலை பாதிக்கப்படுவதாக தகவல் பரவியது. இந்நிலையில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றதால் மீதம் உள்ள 5 நபர்களில் யார் இறுதி வாரத்திற்கு போக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று வந்த வீடியோ ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். அதில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை யாரவது ஒருவர் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என கூற, என்னை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு கவின் வெளியேறயுள்ளதாக அந்த தகவலில் உள்ளது. இதே போல் கடந்த சீசனில் யாஷிகா பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார் என்பது குறிப்படத்தக்கது.

tv show kamalhassan kavin contest bigboss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe