'Today is the happiest day of my life' '-edappadi palanisamy

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப்படிப்பில்7.5 சதவிகிதஉள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் படி, அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர் மருத்துவம் பயில்வதற்குத் தேர்வாகியுள்ளனர். இவர்களில் முதல் 18 பேருக்குமருத்துவக் கலந்தாய்விற்கான ஒதுக்கீட்டு ஆணையைவழங்கும் நிகழ்ச்சி, சென்னை நேருஉள்விளையாட்டு அரங்கில்நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்கலந்துகொண்டனர்.அதேபோல்ஒதுக்கீட்டின் கீழ்தகுதி பெற்றுள்ளமாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.நீட் தேர்வைரத்து செய்யத்தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகதெரிவித்தமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டமும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும்பயனளிக்கும் வகையில்7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்துள்ளோம். "இந்த நாள் என் வாழ்வில்மகிழ்ச்சிகரமான நாள், அரசுப் பள்ளியில்பயின்றஎனக்கு மனநிறைவை கொடுத்ததிருநாள் இந்நாள்'' எனவும் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.அதில்கண்ணீருடன் பேசியஅரசுப் பள்ளிமாணவி ஒருவரின்தந்தை, ''எங்க அப்பா படிக்காதவருங்க. இந்தக் காலத்துல என் பிள்ளைக்குடாக்டர் படிக்க சீட்டுகொடுத்தசாமிக்கு நன்றிங்க, வாழ்க்கையில் மறக்கவேமுடியாதுங்க ஐயா'' எனக் கண்ணீருடன் முதல்வரின் காலில்விழ, தமிழக முதல்வர் அவரை தடுத்துஆறுதல் கூறினார். இது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.