Skip to main content

இன்று முதல் கத்திரி வெயில்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

கோடைகாலத்தின் உச்சக்கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பித்து பலமாவட்டங்களில் 100 டிகிரியை தொட்டது. அப்படியிருக்க உச்சக்கட்ட தாக்கமாக கருதப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. 

sun

 

இந்த கத்தரி வெயிலால் வெப்பநிலை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் எனவே பொதுமக்கள் அதிகம் வெளியே செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்புண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் இந்த கத்தரி வெயிலானது வரும் 28-ஆம் தேதிவரை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

கோடை காலத்தில் அரைநாள் விடுப்பு; அதிரடி அறிவிப்பு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Action Notification on Half day leave during summer in telangana

நடப்பாண்டில், இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தை விட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெலங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் என்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பமும், குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. 

கோடை காலத்தை ஒட்டி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில்,10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.