(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அண்மையில்மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்குமத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கர்நாடகாமேகதாதுவில்அணை கட்ட காவிரி மேலாண்மை வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதனையடுத்துகர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில்அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கும், கர்நாடக அரசிற்கும் கண்டனங்களை தெரிவித்தன.கடந்த நான்காம் தேதிதிருச்சியில் திமுக தனது தோழமைகட்சிகளுடன் நடத்திய போராட்டத்தில், இதனைகண்டுகொள்ளாத தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க இன்று மாலை4 மணிக்கு தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் அணைக்கட்டும் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.