MLA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 17 பேர் குற்றாலத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த மூன்று தினங்களாக தங்கியுள்ளனர்.

Advertisment

நேற்று மருதுபாண்டிய மன்னர்கள் சிலைக்கு மாலையிட சென்ற எம்.எல்.ஏ தாங்கதமிழ்ச்செல்வனும், மாரியப்பனும் இன்று காலைவரை அங்கேதிரும்பவில்லை இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்குவெளியாகும் என்பதை அறிந்த எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் பதட்டமும் பரபரப்புமாக உள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலை பேசுகையில்,

Advertisment

இன்று தீர்ப்பு வெளியாகிறது. எங்களிடம் பதற்றம் இல்லை இந்த அரசு வாக்களித்த ஒன்றரை கோடி மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றவில்லை அவர்களுக்கும் துரோகம் செய்துவிட்டது. மேலும் அம்மா ஏற்படுத்திய உணவகம் சரியாக செயல்படவில்லை. அவர்கள் வழங்கிய இலவச திட்ட உதவிகளும் மக்களுக்கு சென்றடையவில்லை. அதன் பலனாக இன்று வெளியாகும்தீர்ப்பு வாக்களித்த மக்களுக்கும் எங்களுக்கும் தீபாவளி பரிசாகஅமையும், எங்களுக்கும், தமிழக மக்களுக்கும் இன்றுதான் தீபாவளி என்றார். இந்த பேட்டி ரிசார்ட்டின் உள்ளே நடந்தது.