Advertisment

'இன்று நாம் மோடியிடம் ஏமாந்த நாள்'- தயாநிதி மாறன் பரப்புரை

'Today is the day we are deceived by Modi' - Dayanidhi Maran campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

Advertisment

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'கண்டிப்பாக வர இருக்கும் தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்வீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி இந்தியாவை ஆண்டார். குறிப்பாக 2021-க்கு முன்பு இங்கிருந்தஅடிமை ஆட்சியை வைத்து தமிழகத்திற்கு ஒரு நல்ல காரியத்தையும் செய்யவிடாமல் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்று நமக்கு முக்கியமான நாள்.

Advertisment

என்ன நாள்? மோடி நம்மை ஏமாற்றிய நாள் ஏப்ரல் 1. பத்து ஆண்டுகளாக கருப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று சொல்லி இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட போடாத மோடி தான் இன்று தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்திருக்கிறார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போதும் மோடி வரவில்லை. வெள்ளம் வந்த போது தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து 'ஐயா நாங்க ரொம்ப கஷ்டப்படுகிறோம். மக்களுக்கு உதவி பண்ண வேண்டும் ஏதாவது உதவி பண்ணுங்க' என்று கேட்டார். உதவி செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றினார் மோடி. ஆனால் தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் உதவி தந்தார். தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டின் மீது பாசம், தமிழின் மீது பாசம் ஆனால் துன்பப்படுகிற போது எட்டிப் பாராத மனிதர் தான் மோடி''என்றார்.

elections
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe