Advertisment

21 நாட்களுக்குப் பிறகு குறைந்த உயிரிழப்பு... சிறு அறிகுறி இருந்தால்கூட தாமதம் வேண்டாம் -ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

TODAY CORONA UPDATE IN TAMILNADU

Advertisment

தமிழகத்தில் இன்று மேலும் 5,980 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்5,957 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநில மற்றும் பிற நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரைகரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 53,710 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில்கரோனாபாதிப்பு எண்ணிக்கை 1,294ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை1,24,071 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில்71,679 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில்4,686பேருக்குகரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,603 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாலிருந்து குணமடைந்தோர்எண்ணிக்கை 3,13,280 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 80 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 21 நாட்களாக100-ஐ கடந்திருந்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 100க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில்கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 2,564 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டில் 372பேரும், திருவள்ளூரில் 368பேரும்உயிரிழந்துள்ளனர்.

Advertisment

TODAY CORONA UPDATE IN TAMILNADU

இந்நிலையில் சிறு அறிகுறி இருந்தால் கூட தாமதம் இல்லாமல்அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

corona virus Radhakrishnan Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe