
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 12 நாட்களாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டோரில் 1,837 பேர் தமிழகத்திலும் மற்றவர்கள் பிற மாநில மற்றும் பிற நாடுகளில் இருந்தும் தமிழகம் வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல் இன்று ஒரே நாளில் கரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் ஒரு உயிரிழப்பும், அரசு மருத்துவமனைகளில் 22 இழப்புகளும் நிகழ்ந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,406 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 9வது நாளாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரம் என்ற நிலையில் பதிவாகி வருகிறது.
மேலும் இதுவரை மொத்தமாக சென்னையில் 27,398 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 1,372 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 20,705 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து 12-ஆவது நாளாக இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.