today corona ratein tamilnadu

தமிழகத்தில் இன்றுபல நாட்களுக்கு பிறகு அதிரடியாக4 ஆயிரத்திற்கு குறைவாக 3,914 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,87,400 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்39,121 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,036 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 25-வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,89,995 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 88,643 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில், இன்று மேலும் 4,929 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,37,637 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 56 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,642 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3,520 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று அதிகபட்சமாக கோவையில் 319பேருக்கும், சேலத்தில்188பேருக்கும்ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.