today corona rate in tamilnadu

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 33,651 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 6,640 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,07,789 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 20,905 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 13,39,887 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 303 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 178 பேரும்தனியார் மருத்துவமனைகளில் 125 பேரும்கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 17,359 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment