ADVERTISEMENT

32 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு... நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!!

07:44 PM May 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 31,892 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 6,581 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 288 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி, நாளை முதல் தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மே 17ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்கு உள்ளேயே பயணிக்க இ-பதிவு கட்டாயம். மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி. அதேபோல் நாட்டு மருந்து கடைகள் திறக்க அனுமதி. பூ, காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT