அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

today corona rate in tamilnadu

தமிழகத்தில் 20 -ஆவது நாளான இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,428 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,84,747 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,999 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 397 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 46 -ஆவது நாளாக 1,000 -க்கும் குறைவாகக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,16,119 ஆக அதிகரித்துள்ளது. இன்று, ஒரேநாளில் தமிழகத்தில் 68,388 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இன்று மேலும் 1,398 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை, தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,62,015 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கரோனாவால் 11 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,733 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,857 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe