Advertisment

12 ஆயிரத்திற்கும் கீழ் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

TODAY CORONA RATE IN TAMILNADU

Advertisment

தமிழகத்தில் 14-ஆவது நாளான இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,464 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,76,174 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 11,173 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 396 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 40-ஆவது நாளாக 1,000 -க்கும் குறைவாகக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,13,801 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 60,365 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், இன்று மேலும் 1,797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,332 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 14 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,669 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்3,837 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

Tamilnadu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe