today corona rate in tamilnadu

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டி ஒரே நாளில்கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 4,231 பேருக்கு கரோனா தொற்றுகண்டறியப்பட்டுள்ளது.அதேபோல் இன்று ஒரே நாளில் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கரோனாவிலிருந்து குணமடைந்தோர்எண்ணிக்கை 78,161 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிடகுணமடைந்தோர்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22பேரும்கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கரோனாவுக்கு உயிரிழந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 23 பேர் ஒரே நாளில்கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக சென்னையில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,169 ஆக அதிகரித்துள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 145 பேரும், திருவள்ளூரில் 117 பேரும், காஞ்சிபுரத்தில் 40 பேரும், மதுரையில் 95 பேரும், ராமநாதபுரத்தில் 28 பேரும், திருவண்ணாமலையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயர்ந்தோர் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 40 ஆவது நாளாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது இதுவரை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில்இன்று 1,216 பேருக்கு கரோனாதொற்றுகண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ஆறாவது நாளாக பாதிப்பு 2 ஆயிரத்தைவிடகுறைந்து பதிவாகியுள்ளது.அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 73,728 ஆக அதிகரித்துள்ளது.சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,015 பேருக்கு இன்று ஒரே நாளில்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.