/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sfsfdfd_39.jpg)
தமிழகத்தில் கடந்த6 நாட்களாகநான்காயிரத்திற்கும் குறைவாககரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 4 ஆம் நாளாகதமிழகத்தில் மூன்றாயிரத்திற்கும் குறைவாக 2,522பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,14,235 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்27,734 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 695 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 9-வது நாளாக 1,000-க்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,97,077 ஆக அதிகரித்துள்ளது. முன்பாக ஒரேநாளில்ஒரு லட்சம் வரை கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டநிலையில், படிப்படியாக 90 ஆயிரம், 80 ஆயிரம் எனக் குறைந்து தற்பொழுது 70 ஆயிரம் என குறைத்துள்ளது.இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 69,344 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இன்று மேலும் 4,029 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,75,518 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 27 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,983 ஆக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)