
தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்திற்கும் குறைவாக 3,077 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00,193 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 34,198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 833 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 4-வது நாளாக 1,000-க்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,93,299 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 79,821 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இன்று மேலும் 4,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,55,170 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 45 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,825 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3,569 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.