today corona rate in tamilnadu

Advertisment

தமிழகத்தில் இன்று மேலும் 5,647பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 5,645 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்துவந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 46,336 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

21 நாட்களுக்குப் பிறகு சென்னையில் நேற்று1,000க்கும் மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும்சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,187 ஆகபதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,62,125 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில், ஒரே நாளில் 92,166கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,19,448 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 85 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,233 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 3,149 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களில்4,603பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தொடர்ந்து சில நாட்களாகவே கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கோவையில் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் கோவையில் ஒரே நாளில் 656பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில்296பேருக்கு ஒரே நாளில்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.